இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சுதன்மையுள்ள ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பிடம் ஒன்றிய அரசு தகவல்.
தமிழ்நாட்டில் ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'கோல்ட்ரிஃப்'(Coldrif), குஜராத்தில் ரெட்னெக்ஸ் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்'(Respifresh TR) மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஷேப் பார்மா பிரைவேட் லிமிடெட் தயாரித்த 'ரீ லைஃப்'(ReLife) ஆகிய மருந்துகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது