court

img

மாவட்ட நீதிபதி நேரடி நியமன தகுதி - உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதித்துறை அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் ஏழு ஆண்டுகள் ஒருங்கிணைந்த அனுபவம் கொண்டவர்கள், மாவட்ட நீதிபதியாக நேரடி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, மாவட்ட நீதிபதி நியமனத்திற்கான தகுதியைக் குறிப்பிடும் விதிகளை வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் நீதித்துறை அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் ஏழு ஆண்டுகள் ஒருங்கிணைந்த அனுபவம் கொண்டவர்கள், மாவட்ட நீதிபதியாக நேரடி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நேரடி நியமனத்தில், மாவட்ட நீதிபதிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 35 ஆக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.