மரண தண்டனை கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மரண தண்டனை கைதிகள் சட்ட நிவாரணம் பெற காலவரையறையே இல்லை. கொடிய குற்றங்களை செய்தவர்கள், இதை சாதகமாக பயன்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நலன்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்க்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு "தேவையற்றது”; ஏற்கனவே உள்ள நன்கு சீரமைக்கப்பட்ட கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டம் தெரிவித்தது. மேலும், ஒன்றிய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.