tamilnadu

img

பெருந்தொற்றால் நெருக்கடிகளை சந்தித்த குடும்பங்களுக்கு எல்ஐசி உதவியது... தென்மண்டல பொதுமேலாளர் கே.கதிரேசன் பேச்சு...

சென்னை:
இந்திய ஆயள் காப்பீட்டுக்கழக தென் மண்டல அலு வலகம் சார்பாக   75-வது சுதந்திர தின விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளர் கே.கதிரேசன்  தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பெருந்தொற்றினால் நெருக்கமானவர்களை பறிகொடுத்தவர் களுக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடிகளை  சந்தித்த பாலிசி தாரர்களுக்கு தக்க சமயத்தில்  எல்.ஐ.சி. ஊழியர்கள்  உதவியதை அவர் நினைவு கூர்ந்தார். 31, மார்ச் 2021 வரை எல்.ஐ.சி. ஆ•ப் இந்தியா, பாலிசி எண்ணிக்கை அடிப்படையில் இது வரை இல்லாத அளவாக மிக அதிகமாக 2.10 கோடி பாலிசிகளைப் பெற்றுள்ளது. மேலும் முதல் வருட பிரிமீய வருமானமாக ரூ.56,284.86 கோடிகளை ஈட்டியுள்ளது. எல்.ஐ.சியின் சந்தை பங்களிப்பு பாலிசிஎண்ணிக்கை அடிப்படை யில் 74.58விழுக்காடாகும்,   மற்றும் பிரிமீய வருவாய் அடிப்படையில் 66.18விழுக்காடாகும்.  

எல்.ஐ.சி. மண்டலங் களில், தென் மண்டலம் ஒற்றைப் பிரீமிய வருவாய் இலக்கை முதலில் அடைந்தது. மேலும் முதல் வருடபிரிமீய வருவாய் இலக்கைஇரண்டாவதாக அடைந்த தாகவும் அவர் கூறினார்.தென் மண்டலம், காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சம்மந்தப் பட்டவர்களை அணுகி அவர்களுடைய காப்பீட்டுப் பாதுகாப்பு  தொடர்வதற்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் கதிரேசன் கூறினார்.