சென்னை:
தமிழ்நாடு மின் வாரியம், மின் கட்டணத்தை செலுத்த மேலும் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு அரசுக்கு பரிந்துரைத் துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தால் மின் கட்டணம் செலுத்த ஏற்கனவே மே 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அவகாசத்தை மேலும் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு மின் வாரியத்தால் வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா தொற்று பரவல் காரணத்தால் மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.தற்போது, அரசு ஊரடங்கை மேலும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மின்சாரத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி மார்ச் 25ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை ஜூலை 6 ஆம் தேதி வரை தாமதக் கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங் கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்க ளின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி மார்ச் 25 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் வரை இருப் பின் அவர்கள் ஜூன் 15ஆம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், மின் கட்டணம் தங்களுடைய கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறியவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர் அழுத்த மின் நுகர்வோர்களை பொருத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்புக்கான உரிமையை விட்டுக் கொடுத்ததினால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதத்திற்கான மின் கட்டணத்தை முறையே மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் செலுத்தாமல் இருப்பின் அந்த உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.அவர்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.மே மாத உயர்மின் அழுத்த மின் கட்டணத்தை நுகர்வோர்கள் அந்த மாதத்திற்கான குறிப்பிட்டகெடு தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.