tamilnadu

img

மின்கட்டண பில்: அதிர்ச்சியில் மக்கள்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 27- தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த மாதம் மின் கட்டண விகிதத்தைக் குளறுபடியாகக் கணக்கிட்டு பல மடங்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்கமாக 2 மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வந்த மின்கட்டணம் கொரோனா பொது முடக்கத்தால் ஏற்கனவே செலுத்திய தொகையையே மீண்டும் செலுத்துமாறு மின்சார வாரியம் அறிவித்தது. அதனடிப்படையில் பெரும்பாலானோர் மின் கட்ட ணத்தைச் செலுத்தினர். 75 விழுக்காட்டினர் மின் கட்டணத்தைச் செலுத்தி விட்டதாக மின்வாரியம் உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது. இந்நிலையில் ஜூன் மாதத்தில் வீடுகளுக்கு வந்துள்ள மின்கட்டணத்தைப் பார்த்து ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். மரியதாஸ் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு “ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா 260 ரூபாய் மட்டும் மின் கட்டணம் செலுத்திய நிலையில், தற்போது செலுத்த வேண்டிய தொகை 1,728 ரூபாய் வந்துள்ளதாகக் கூறினார். அவருடைய மின் இணைப்பு எண் 02576001452 ஆகும். அதேபோல் உளுந்தூர்பேட்டை மாடல் காலனியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் 470 ரூபாய் செலுத்திய நிலையில், தற்போது செலுத்த வேண்டிய தொகை  1,600 ரூபாய் என அதிர்ச்சியுடன் கூறினார். இவருடைய மின் இணைப்பு எண் 02576001551 ஆகும். இப்படி 4, 5 மடங்கு மின் கட்டணம் வந்துள்ளது என்பது சாதாரண ஏழை, நடுத்தர மக்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 100, 200, 500 யூனிட்டுக்கு மேல் போனால் அதனடிப்படையில் கட்டண விகிதம் மாறும் நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள யூனிட்டை இரண்டால் வகுத்து அதில் இரண்டு×100 யூனிட் எனக் கழித்துவிட்டு தனித்தனியாகத் தொகையைக் கணக்கிட்டால் இவ்வளவு தொகை வருவதற்கு வாய்ப்பில்லை எனப் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். இதில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் உபயோகப்படுத்து பவர்களுக்குப் படிநிலை கணக்கு (ஸ்லாப் சிஸ்டம்) என்பதே ஒரு மோசடியான திட்டமாக உள்ளது. ஆனால் 4 மாத மொத்த கணக்கில் 200 யூனிட் கழிக்கப்படுகிறது.  மீதியுள்ள மொத்த யூனிட் கணக்கில் இரண்டாவது முறையாகக் கட்டப்பட்ட பணத்தைக் கழித்துவிட்டு கட்டண விகிதம் கணக்கிடப்பட்டு உள்ளதாகவும், கொரோனா காலத்தில் தமிழக அரசு மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் எனவும் சமூக ஆர்வ லர்கள் கூறுகின்றனர்.  4 மாத மின் சார பயன்பாட்டின் கணக்கை நியாயமான முறையில் கணக்கிட வேண்டும் என்பதே அனை வரின் எதிர் பார்ப்பாக உள்ளது. மக்களின் எதிர் பார்ப்பை  நிறைவேற்றுமா அரசு.