tamilnadu

img

சென்னையில் விளையாட்டு போட்டிகளுடன் சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்...

சென்னையில் விளையாட்டு போட்டிகளுடன் சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாப்பூர் பகுதி 171வது வட்டம் வள்ளீஸ்வரன் தோட்டம் கிளை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளை தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன் தொடங்கி வைத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, காந்திநகர் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எழும்பூர் பகுதி புல்லாபுரம் கிளைகள் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் போட்டிகள் நடைபெற்றது. வி.நாகலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.நாகராணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் புஷ்பா நகரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பகுதிச் செயலாளர் எஸ். சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் வி. தனலட்சுமி, துணை தலைவர் ஏ. சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தி.நகர் பகுதி நல்லாங்குப்பம் கிளை சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி காந்திநகர் கிளை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கே.கே.நகர் சிவன் பூங்கா அருகே சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் உமாபதி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் விஜயா, என்.சாந்தி, எம்.ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி காந்திநகர் கிளை சார்பில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, கன்னியம்மன் கோயில் கிளை சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகளை மாநில பொருளாளர் தீ. சந்துரு தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், கிளைத் தலைவர் சரண், செயலாளர் சார்லஸ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் நிலங்கள் பயிரிடுவோர் விவசாயிகள் சங்கம் மற்றும் அடிமனை குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழனன்று (ஜன.15) திருநீர்மலை டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர்   கிளை சார்பாக பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப்பேட்டை பகுதி பி.எஸ்.நகர் கிளை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப்பேட்டை பகுதி ஜோதியம்மாள் நகர் கிளையில் ஊர் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில், சோழிங்கநல்லூர் பகுதி, செம்மஞ்சேரியில் ஊர்கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வும் மற்றும் விளையாட்டு போட்டியும் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எழும்பூர் பகுதி, சேத்துப்பட்டு கிளை சார்பில் சமத்துவ பொங்கல்  வைக்கப்பட்டது. இந்நிகழ்வை சிபிஎம் பகுதிச் செயலாளர் வே. ஆறுமுகம் தொடங்கி வைத்தார். வாலிபர் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் ஜா.பார்த்திபன், பகுதிச் செயலாளர் ஹேமந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி, 113 வது வட்டம் பார்த்தசாரதிபுரம் கிளை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை 113 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ் துவக்கி வைத்தார்.