அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி முதல்வர் நலம் விசாரிப்பு
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அமைச்சராகவும், திமுக பொதுச் செயலராகவும் உள்ள துரைமுருகன் வயது மூப்பால் வரும் பிரச்சனைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார். சனிக்கிழமை துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை களை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று துரை முருகனை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து, அவருக்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளுக்கான அவகாசம் நிறைவு
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணி களுக்கு விண்ணப்பம் அளிப்பதற்கான அவகாசம் ஜன.18 (ஞாயிற்றுக்கிழமை) அன்றுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர் கணக்கெ டுப்பு பணி கடந்த நவ.4 முதல் டிச.14 ஆம் தேதி வரை நடை பெற்று வந்த நிலையில், கடந்த டிச.19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப் பிக்க ஜன.18 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவ காசம் அளித்திருந்தது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. எஸ்ஐஆர் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் பிப்.10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதுவரை மொத்தம் சுமார் 12 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஞாயிறன்டன் நிறைவு பெற்ற நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்கா ளர் பட்டியல் வெளியாகிறது.
அல்மாண்ட் கிட் சிரப் இருமல் மருந்து விற்பனைக்கு தமிழ்நாட்டில் தடை
சென்னை: அல்மாண்ட் கிட் சிரப் இருமல் மருந்து விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. எத்திலீன் கிளைகால் என்ற உயிருக்கு ஆபத்தான வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்ட தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான அல்மாண்ட் கிட் சிரப் மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் எத்திலீன் கிளைகோல் அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை, அல்மாண்ட் கட் சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியது. இதையடுத்து, தெலுங்கானாவில் இம்மருந்தை விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப் பட்ட நிலையில், தமிழகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘யாருடன் கூட்டணி?’: விரைவில் அறிவிப்பு ராமதாஸ் தகவல்
சென்னை: சட்ட மன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரை வில் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரி வித்துள்ளார். பாமக சார்பில் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட இதுவரை 4,109 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அன்புமணியை பாமக தலைவர் என்று குறிப் பிட்டு செய்தி வெளியிட வேண்டாம் என்று ராம தாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுபட்டோருக்கு நாளை முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்
சென்னை, ஜன.18 - பொங்கல் தொகுப்பு பெறாமல் விடுபட்டோருக்கு ஜன.20 ஆம் தேதி முதல் மீண்டும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு, வேட்டி, சேலை ஆகியவற்றுடன் சேர்த்து ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.8 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப் பட்டன. இந்தப் பணியில் சுமார் 50 ஆயிரம் கூட்டுறவுத் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நெம்மேலியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார் மாமல்லபுரம்:
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க உள்ளார். மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6 ஆவது நீர்த்தேக்கம் அமைக்கப் படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரத்தை அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உபவடிவ நிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதி காரிகள் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், ரூ.342.6 கோடியில் 6 ஆவது புதிய நீர்த்தேக்க கட்டுமானப் பணிக்கு திங்களன்று (ஜன.19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறார்.