மாணவர்களிடையே புழங்கும் போதைபொருளைஅரசு தடுக்க வேண்டும் அறிவியல் இயக்க மாநாட்டில் தீர்மானம்
திருவள்ளூர், ஜன.20- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட 17 வது மாநாடு ஞாயி றன்று (ஜன. 18), செங்குன்றத்தில் விஜய சாரதி நினைவரங்கத்தில் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எஸ்.குமார் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சாத்தகுமாரி எத்து ராசன் வரவேற்றார். மாநில பொருளாளர் சுதாகர் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். "அறிவியல் அறிவோம் அறிவியலால் இணைவோம்' என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் அம்பிகா கருத்துரை வழங்கினார். கடந்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் பி.ஜெயநாராயணன் வேலை அறிக்கையையும் பொருளாளர் மருத்துவர் அனுரத்னா வரவு-செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்ட நிர்வாகி தனஞ்செயன் வாழ்த்துரையும் முனைவர் காந்தி லெனின் நிறைவு செய்து பேசினர். குழந்தைகள் அறிவி யல் மாநாட்டில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வழிகாட்டி ஆசிரியர்களையும் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் அனித்தாகுமாரி நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக பி.ஜெய நாராயணன், செயலாளராக ஆசிரியர் எஸ்.குமார், பொருளாளராக அனுரத்னா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதை பொருள்களை மாநிலஅரசு இரும்புகரம் கொண்டு தடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கும்மிடிப்பூண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நச்சு காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது, இந்நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
