இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்தில் (பிஇசிஐஎல்) ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்ப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: Medical
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,550
தகுதி: மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 30 முதல் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும், கணினியில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant/Technician
காலியிடங்கள்: 41
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,450
தகுதி: டெக்னீசியன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lab Attendant Gr-II
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிஎம்எல்டி மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cashier
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.24,550
தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவமும், கணினிப் பிரிவில் நல்ல அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Radiographic Technician Grade-I
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,450
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Mechanic (A/C & R)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.23.550
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.750. எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளிகள் பிரிவினர் ரூ.450 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2022