சென்னை, ஜூன் 1- அரசு நிபுணர்குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் கல்வி யாளர்களையும் இணைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்விடுத் துள்ள அறிக்கை வருமாறு: கொரோனா நோய்த்தொற் றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளி களும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத் தக் கூடிய அளவிற்கு வாய்ப் புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்க ளாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அவர்க ளுக்கு உள்ளது. ஆனால், குக்கிராமங்களி லெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளி கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான்.
அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவு மில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வ தற்குரிய வாய்ப்பு வசதி இல்லாத வர்கள். அரசுப் பள்ளியில் பணி யாற்றக்கூடிய ஆசிரியர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் மூத்த கல்வியாளர்கள் என்று எவ ருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கா மல் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் இந்த அரசின் முடிவு கண்டிக்கத் தக்கது. ஓய்வு பெற்ற இயக்குனர்கள் கூட ஒருவரும் அந்தகுழுவில் இல்லை.
மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வி யில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலை சிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பொருத்த மானவர்களில் சிலரையும் நிபு ணர் குழுவில் இணைக்க வேண்டும். இதுவே பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்களை சந்திப்பதற்கும் செயல் திட்டங்க ளைத் உருவாக்குவதற்கும், எதிர் கால கல்வி வளர்ச்சிக்கு ஏதுவாக வும் அமையும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
அறிவியல் இயக்கம் கோரிக்கை |
தமிழக அரசு விரிவுபடுத்தி வெளியிட்டுள்ள கல்விக்கான வல்லுனர் குழுவில் அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பள்ளி ஆசிரியர் சமூகம் என்ற கல்வி அமைப்பின் மாபெரும் அங்கத்தை முற்றிலும் புறக்கணித்து இந்த குழு அமைக்கப்பட்டிருப்பது சரியல்ல. கூடுதலாக இணைக்கப்பட்ட நால்வரில் மூவர் தனியார் பள்ளி அமைப்புகளை சார்ந்தவர்கள். கோவிட்-19 பாதிப்பினால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை எப்போது, எவ்வாறு திறப்பது, உடனடி செய்ய வேண்டியது என்ன என்று தீர்மானிப்பதில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பும், குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பும், ஆசிரியர் சங்கங்களின் பங்கேற்பும் இன்றியமையாதது. அவர்களை புறக்கணிப்பது சரியில்லை. அவர்களையும் இந்தக்குழுவில் இணைக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். |