சென்னை மதுரவாயலில் இரவில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்த தீ விபத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாதக் குழந்தை எழிலரசி உயிரிழந்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் பாக்யலட்சுமி நகர் அன்னை இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் நடராஜன். நடராஜன் தான் பயன்படுத்தி வரும் எலக்ட்ரிக் பைக்கை கடந்த 15-ஆம் தேதி இரவு, இரவில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்கச் சென்ற நிலையில், அதிகாலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் நடராஜனின் மகன் கௌதம், மருமகள் மஞ்சு மற்றும் 9 மாத பேரகுழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாதக் குழந்தை எழிலரசி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்து கௌதம் மற்றும் மஞ்சு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.