tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு!

மாடு முட்டியதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், கோவை மாநகராட்சி அதிரடியாக, சாலைகளில் சுற்றித்திரிந்த  மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி 86 ஆவது வார்டு புல்லுக்காடு பகுதி யில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, தொழுகை முடித்து  வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண், அவரது  5 மாத குழந்தை உட்பட 3 பேரை மாடு முட்டியதில் படுகா யம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கோவை அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடி யாக மாநகராட்சி நிர்வாகத்திடம், சாலையில் சுற்றித் திரி யும் மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்  என்கிற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.  இதனையடுத்து, கோவை மாநகராட்சி ஊழியர்கள் உட னடியாக புல்லுக்காடு பகுதியில் சுற்றித்திரிந்த மாடு களைப் பிடித்துச் சென்றனர். மேலும், சாலைகளில் மாடு களைத் திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்ப துடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில்  குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

சேலம், மார்ச் 17 – தங்களின் பூர்வீக நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாக வும், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என குற்றம்சாட்டி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த சுமதி  (வயது 46) மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலத்தை உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக  பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சுமதி தனது மகன் கவியரசன், மகள் அட்சயா மற்றும் தாய்  சித்தம்மாளுடன் திங்களன்று சேலம் ஆட்சியர் அலுவ லகத்தில் தீக்குளிக்க முயன்றார். ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்ததால், சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகப் பக்கவாட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயன்றனர். அங்கிருந்த பயணிகள் அவர்கள் மீது  தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.  நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றி யம் ஏளூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றன. இவர்களுக்கு குடியிருக்க வீடு இல்லாத நிலை யில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 15 ஆண்டு களாக வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம்  மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என  குற்றம்சாட்டி, திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு ஏளூர் பகுதியை சேர்ந்த இளைஞர்  ஒருவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு  முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்தரங்கம்

ஓய்வூதியம் உரிமையா? வர்த்தகமா? என்கிற தலைப்பில்,  ஈரோட்டில் சிஐடியு சார்பில் ஞாயிறன்று கருத்தரங்கம் நடை பெற்றது. சிஐடியு அகில இந்திய முன்னாள் தலைவர் தோழர் ஈ. பாலானந்தன் நூற்றாண்டு நினைவையொட்டி, டிஎன் எஸ்டிசி - டிஎன்எம்எஸ்ஆர்ஏ கூட்ட அரங்கில் கருத்தரங்கம்  ஞாயிறன்று சிஐடியு சார்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத் திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க  மாநிலப் பொருளாளர் ச.விஜயமனோகரன் கருத்துரை யாற்றினார். வர்க்கமாய் திரள்வோம், தடையை உடைப் போம் என்ற தலைப்பில் சிஐடியு மாநில துணைத் தலைவர்  எம்.சந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட உதவி தலை வர் என்.முருகையா, துணை செயலாளர்கள் சி.ஜோதி மணி, பி.ஸ்ரீதேவி, கே.பிஜு, வி.பாண்டியன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன் நன்றி கூறினார்.

தார் ஆலைக்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு

கோவை, மார்ச் 17 - கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சின்னக்கள்ளிப்பட்டி கிராமம் காடுவாய் கிணற்றில் தனியார் தார் கலவை தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர். அந்த மனுவில், இந்த ஆலை சுமார் 150 ஏக்கர் விவசாய  நிலங்கள் மற்றும் 50 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி களுக்கு அருகில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் மாசினால் விவசாய நிலங் கள், கால்நடைகள், வனவிலங்குகள், குழந்தைகள் மற்றும்  முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று விவ சாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆலை  நிலத்தடி நீர், காற்று மற்றும் சுற்றுப்புற சூழலை மாசுபடுத் தும் என்றும், எனவே, இந்த தார் ஆலையை அமைக்க  அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.