பொதுப்பாதையை ஆக்கிரமித்த தனிநபர்
பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ள நிலையில், நீதி மன்றம் உத்தரவிட்டும் அகற்றாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே இலுப்புலி கிரா மம் மாரப்பம்பாளையம் பெரங் காடு பகுதியில், விவசாயக் குடும் பங்களின் பொதுப்பாதையில் கற் கள், மரங்களை தனிநபர் ஒருவர் கொட்டி வைத்திருந்தார். இதனை அகற்றக் கோரி நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், பொதுப்பாதையை அனை வரும் பயன்படுத்தலாம் என திருச் செங்கோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனி னும், காவல்துறை மற்றும் வரு வாய்த்துறையினர் நீதிமன்ற உத் தரவை அமல்படுத்தவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியர், திருச்செங்கோடு வட்டாட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்தும், “மக்களைத் தேடி முதல் வர்” திட்டத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இலுப்புலி கிராம நிர் வாக அலுவலகம் முன்பு உண்ணா விரதப் போராட்டம் நடத்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறி வித்தனர். ஆனால், காவல்துறையி னர் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து, 12 குடும்பங் களைச் சேர்ந்தவர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை மண்டல துணை வட்டாட்சியர் கனகலட்சுமி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் தீபன் ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாரப்பம்பாளையம் நிர்வாகி ரவி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கிளைச் செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியச் செய லாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி ராமசாமி உள்ளிட்ட 50-க் கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட னர். இந்தப் போராட்டத்தால் இலுப் புலி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.