tamilnadu

img

விளையாட்டு

இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆன்டிரிவா, டிராப்பர் சாம்பியன்

முக்கிய சர்வதேச தொடர்களில் ஒன்றான இந்தி யன் வேல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர் னியா நகரில் நடைபெற்றது. ஆன்டிரிவா அசத்தல் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலார சின் சபலென்கா, தரவரிசை யில் 9ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆன்டி ரிவாவை எதிர்கொண்டார். ஆன்டிரிவாவை விட சபலென்கா அதிரடியாக விளையாடக் கூடியவர் என்ற நிலையில், முதல் செட்டில்  திடமான ஆட் டத்தை வெளிப்படுத்தி அந்த செட்டை சபலென்கா கைப்பற்றினார். இதனால் சபலென்கா இந்தியன் வேல்ஸ் ஓபன் கோப்பையை கைப்பற்றுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 2 செட்களில் திடீ ரென ஆதிக்கம் செலுத்திய ஆன்டிரிவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

டிராப்பர் கலக்கல்

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் டிராப்பர், தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ரூனேவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டிராப்பர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஐபிஎல் 2025  சென்னையில் மார்ச் 19 அன்று டிக்கெட் விற்பனை

ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.  இந்நிலையில், சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டுகள் விலை  ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. WWW.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மார்ச் 19ஆம் தேதி காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

கடும் கட்டுப்பாடுகள்

1. நேரடி டிக்கெட் விற்பனையின் போது ஒருநபர்

2 டிக்கெட்டுகள் மட்டுமே வாங்க வேண்டும். 2. போட்டியின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுபானம், சிகரெட், பான்மசாலா உள்ளிட்டவைகளை பயன் படுத்தக் கூடாது

3. இலவச குடிநீர் வசதி உள்ளது. அதனால் பிளாஸ்டிக் கொண்டு வரக் கூடாது.

4. போட்டியை காண இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தில் மைதானத்திற்கு வருபவர்கள் 2 மணிநேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும்

 5. டிக்கெட் வைத்து இருப்பவர்களுக்கு போட்டி நடைபெறும் நாளன்று  சென்னை மாநகர பேருந்தில் இலவச பயண வசதி உள்ளது.

கோப்பை வெல்ல பூஜையாம் : கொல்கத்தா அணிக்கு நெட்டிசன்கள் கண்டனம்

18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் 10 அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். சென்னை, தில்லி, பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 அணிகள் சாதாரணமாக (இதுவரை வெளியான தகவலின்படி) பயிற்சியை தொடங்கின. ஆனால் கொல்கத்தா, மும்பை, லக்னோ அணிகள் பூஜை செய்து பயிற்சியை தொடங்கியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. மும்பை, லக்னோ அணிகளின் பூஜை சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் செய்திகளாக மட்டுமே வலம் வரும் நிலையில், கொல்கத்தா அணியின் மைதான பூஜை வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது. பூஜை செய்தால், டாஸ் வெல்ல முடியுமா? வீரர்கள் காயம் இல்லாமல் விளையாட முடியுமா? மழை இல்லாமல் விளையாட முடியுமா? என கொல்கத்தா அணி நிர்வாகத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்து வருகின்றனர்.