இலவச வீட்டு மனையை அளந்து
அத்து கட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், பெரிய தச்சூர் கிராம மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை அளந்து அத்து கட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். கோரிக்கை மனுவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் கிராமத்தில் வசிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டி வனம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது, ஆனால் இதுநாள் வரை வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவின் இடம் அளவிடும் பணி செய்யாமல் உள்ளது. அதனால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்தும் இதுநாள்வரை நடவடிக்கை எடுக்க வில்லை, அதனால் உடனடியாக தங்களுக்கு வழங்கிய இலவச மனை பட்டா இடத்தினை பயனாளிகளுக்கு அளந்து அத்து காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.