tamilnadu

தேர்தல் பணியாளர்கள் போராட்டம் வெற்றி; நிலுவைத்தொகை பட்டுவாடா

சென்னை, மே 7-சென்னை மாநகராட்சி அயன்புரம் மண்டலம் 6ல் தேர்தல் பணிசெய்த (பிஎல்ஓ) அங்கன்வாடி மற்றும் அரசு ஓய்வுபெற்ற ஊழியர்களின் உழைப்பை சுரண்டிய அதிகாரிகளை கண்டித்து அயன்புரம் மண்டலம் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த தேர்தலுக்கு முன் வாக்காளர்கள் பற்றிய விவரக்குறிப்பு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு தேர்தல் பணிசெய்ததற்கு ( பிஎல்ஓ பணி) உரிய ஊதியத்தை தராமல்சில அரசு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்த ஊழியர்கள் திங்களன்று  மண்டலம் 6ல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில்நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தை வழி நடத்திய சிஐடியுவிற்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.