தீக்கதிர் செய்தி எதிரொலி… வாய்க்கால் தடுப்பு சுவரில் மழைநீர் வடிய நடவடிக்கை
சிதம்பரம், நவ.25- சிதம்பரம் தில்லை அம்மன் ஓடை வாய்க்கால் ஓரமாக சிதம்பரம் பேருந்து நிலை யம் வரை இணைப்பு சாலை 1.5 கிலோ மீட்டர் இணைப்பு சாலை அமைக்க கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் இணைப்பு சாலை அமைக்க வில்லை. இந்த தடுப்பு சுவரில் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதி களில் மழை நீர் விரைவில் வடிவதற்கான வசதி கள் இல்லை. இதனால் சிதம்பரம் நகரத்தில் பெய்யும் மழை நீர் விரைவில் வாய்க்காலில் வடியா மல் உள்ளது. தடுப்பு சுவரில் மழை நீர் விரைவில் வடிவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நல சங்கத்தின் கோரிக்கை யுடன் தீக்கதிரில் நவம்பர் 25-ஆம் தேதி செய்தி வெளியிட்டது. இதனையொட்டி பொதுப்பணித்துறையினர் வாய்க்கால் தடுப்பு சுவரில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு குடியிருப்போர் நல சங்கம், பொதுமக்கள் பொதுப்பணித் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
