tamilnadu

img

பத்திரிகையாளர் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் டி.யு.ஜே சென்னை மாவட்ட பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்

பத்திரிகையாளர் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் டி.யு.ஜே சென்னை மாவட்ட பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, பிப்.22- பத்திரிகை மற்றும் ஊடகச் சுதந்தி ரத்தைப் பாதுகாக்கும் உயரிய நோக்கத்து டன் செயல்படும் 'தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்' (டி.யு.ஜே) அமைப்பின் சென்னை மாவட்டப் பேரவைக் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டி.ஜே. அரங்கில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் எஸ்.பி. தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கவுரவத் தலைவர் உ.மைக்கேல் ஜார்ஜ் வரவேற்றார். . மாவட்டச் செயலாளர் ம.மி. ஜாபர் செயல றிக்கை வாசித்தார். இதில் மாநிலப் பொதுச் செயலாளர்கள் போளூர் ஏ. சுரேஷ், கே. முத்து மற்றும் முக்கிய நிர்வாகி கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில்  சென்னை மாவட்டத் தலைவராக ம.மி. ஜாஃபர், செயலாளராக எஸ்.பி. தேவேந்திரன் மற்றும் இணைச் செயலாளராகத் தங்கராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரத்தக்கொடை வழங்கி வரும் நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜேந்திர குமார் மற்றும் ஜாஃபர் ஆகியோர் இந்நிகழ்வில் கௌர விக்கப்பட்டனர். தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்க ளது தேர்தல் அறிக்கையில் பத்திரிகை யாளர் நலத் திட்டங்களை வாக்குறுதியாக அளித்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஊரகப் பத்திரி கையாளர்களை நலவாரியத்தில் இணைத்தல், ஓய்வூதிய விதிமுறை களை எளிமைப்படுத்துதல், சிறு பத்திரிகையாளர்களுக்கான அங்கீகார அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் எ. அப்சர் பாஷா நன்றி கூறினார்.