ஆட்டோ செயலி உருவாக்க கோரி ஓட்டுநர்கள்
புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி பேரணி
ஆட்டோ கட்டண செயலி உருவாக்க கோரி சிஐடியு ஆட்டோ தொழி லாளர்கள் சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி பேரணி நடை பெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் ஆட்டோ தொழிலை சீர ழிக்கும் வகையில் சட்ட விரோதமாக செயல்படும் இரண்டு சக்கர மோட்டார் வாகன வாடகை நிலை யங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 ஆண்டுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். வாரியத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க வேண்டும், ஆட்டோ தொழி லாளர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆட்டோ கட்டண முரண்பாடுகளில் உள்ள இடைவெளியை போக்க, போக்குவரத்துறை சார்பில் ஆட்டோ கட்டண செயலியை வெளியிட வேண்டும், ரேபிடோ,ஓலா, உபர் போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலையில் இருந்து துவங்கிய ஆட்டோ ஓட்டு நர்கள் ஊர்வலத்திற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டு நர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர் பிரபுராஜ், பொதுச்செயலாளர் சீனு வாசன், துணை தலைவர்கள் கொளஞ்சியப்பன், மதி வாணன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மது, வடி வேலு, குமார், மனோ கர், கண்ணன், ராஜா, நட ராஜ், வாசு, நூர்முகமது, பழனி பாலன், செந்தில் குமார், ரவிக்குமார், ரங்கன், செல்வம், ராமு, முருகன், ஆனந்த், சங்கர் உட்பட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். காவல்துறை குவிப்பு புதுச்சேரி நேரு வீதி வழி யாக ஆட்டோக்களுடன் ஊர்வலமாக சட்டப்பேரவை அருகே வந்த ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறை யினர் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.பின்னர் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை கைவிட மறுப்பு ஆட்டோ தொழி லாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி சிஐ டியு, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி,தொமுச உள்ளிட்ட பல்வேறு ஆட்டோ தொழிற்சங்கள் சார்பில் ஒரு வாரகாலமாக புதுச்சேரி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடை பெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் போராட் டத்தை கைவிட வலியுறுத்தப் பட்டது. அதற்கு சிஐ டியு சங்கம் மட்டுமே போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.