tamilnadu

img

மாற்றுத் திறனாளி மாணவர்க்கான உதவித் தொகை இரட்டிப்பு உயர்வு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, செப். 20 - பள்ளி - கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர்க்கு வழங்கப்படும் உதவித் தொகையை இரட்டிப்பாக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர்க்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போது ரூ. 2,000 என்றும்; 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ–மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ. 3,000 என்பதிலிருந்து ரூ. 6 ஆயிரமாகவும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ. 4 ஆயிரம் என்பதிலிருந்து ரூ. 8 ஆயிர மாகவும் உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர்க்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் கல்வி உதவித்  தொகை ரூ. 6 ஆயிரம் என்பதிலிருந்து ரூ.12 ஆயிரமாகவும் உயர்த்தி உத்தர விடப்பட்டுஉள்ளது.

ஏற்கெனவே, மாற்றுத் திறனாளி களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டண மில்லாப் பயணச் சலுகை வழங்கப் பட்டிருப்பதுடன், மாத உதவித் தொகையும் ரூ. 1,000 என்பதிலிருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.