சென்னை,ஆக.09- தமிழகத்தில் 43 மருத்து வர்கள் உயிரிழந்ததாக கூறப் படுவதில் எந்த உண்மை யும் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங் களில் ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகள் மருத்துவர்களின் மன உறுதியை குறைக்கும். ஐ.எம்.ஏ. தெரிவிக்கும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப் படும் என்றும் தெரிவித்தார்.