tamilnadu

கொரோனா பாதிப்பு: அமைச்சர் மறுப்பு

சென்னை, ஜூன் 19- கொரோனா பாதிப்பிருப்ப தாக வெளியான செய்திகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதி யில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்ப டுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்  குடி, சோழிங்கநல்லூர் மண்ட லங்களில் ஆய்வு செய்து நிவா ரண உதவிகளை வழங்கினார். மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு  ஆலோசனையில் பங்கேற்றி ருந்தார். கே.பி.அன்பழகனுடன் ஜெயக்குமார், காமராஜ் உள்  ளிட்ட அமைச்சர்களும் ஆலோ சனையில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் காய்ச்சல் கார ணமாக மனப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு  அவருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டதாக வும் அதனைத் தொடர்ந்து தனி மைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விளக்கம்

அமைச்சர் கே.பி. அன்பழ கனுக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகியிருப்பதாக நாளி தழ்களில் செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த செய்திகளை தொலை பேசி வாயிலாக அளித்த பேட்டி யில் மறுத்துள்ள அமைச்சர், தமக்கு கொரோனா இல்லை என்று கூறியுள்ளார். அதேபோல்  தனக்கு இருந்த காய்ச்சல் சரி யாகிவிட்டது என்று தெரிவித் துள்ள அமைச்சர், மக்கள் பணி யில் இருக்கின்ற காரணத் தால் வாரத்துக்கு ஒரு முறை  தொடர்ச்சியாக கொரோனா சோதனையை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் கே.பி. அன்பழகனை தொலை பேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  நலம் விசாரித்தார்.  விரைவில் முழு நலம்பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.