tamilnadu

கோவையில் உச்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு

கோவை, ஜூலை 23 -  கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித் தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலை யில், புதனன்று கோவையில் பிறந்து ஒரு வாரமான பெண் குழந்தை உட்பட 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற் பட்டிருந்தது. இதனையடுத்து வியாழனன்று 238பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கோவை மக்களி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 700 ஆக கடந் துள்ளது.