tamilnadu

திமுக முதன்மைச் செயலாளரானார் கே.என்.நேரு

சென்னை,ஜன.26- திமுகவின் முதன்மைச் செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி அறி வித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தது வந்த டி.ஆர்.பாலு, மக்களவையின் திமுக குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதால் அவ ருக்கு பதிலாக கே.என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.