சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் எச்சூர் கிராமத்தில் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை மீண்டும் இன்று தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கே நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.