சென்னை:
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கலைப்பயணம் தமிழ்நாட்டின் 8 மையங்களிலிருந்து மார்ச் 15 ஞாயிறன்று துவங்குகிறது.தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையும் , கல்லூரிகளின் தேசியமாணவர் படையும் இணைந்து பேரிடர் மேலாண்மைவிழிப்புணர்வு கலைப்பயணம் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும் பயணப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 200-க்கும் மேற்பட்டகல்லூரிகளிலும், 150-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் கலைநிகழ்ச்சி நடத்தப்படஉள்ளது. ஒவ்வொருகுழுவும் ஒரு நாளைக்கு இரண்டு கல்லூரிகள் மற்றும் இரண்டு கிராமங்களிலும் கலைப்பயணம் நிகழ்த்த உள்ளனர்.இதில் பேரிடர் என்றால் என்ன, பேரிடரைத்தவிர்க்க என்ன செய்ய வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது என்ன, அதன் அவசியம், இதற்கான துறைகள் என்னென்ன செய்கிறது. மாணவர்களும், இளைஞர்களும் எப்படி பயிற்சிஎடுத்துக்கொள்ளலாம் என்பன குறித்த கலைநிகழ்ச்சி நடத்தப்படஉள்ளது.
இக்கலைப்பயணத்தை கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஜோதி வெங்கடேஸ்வரன் துவக்கி வைக்கிறார் என்று சென்னை மாநிலக் கல்லூரியின் தேசிய மாணவர் படைத்தலைவர் மேஜர்.முத்துக்குமார் சனிக்கிழமையன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் முனைவர்கள் சித்ரா, கேப்டன் ஆர்.செல்வி, மாதாசுரேஷ் ஆகியோர் செயல்பாட்டு பயிற்சியையும் , இரா.காளீஸ்வரன், இலயோலா தேசிய மாணவர் படை அலுவலர் பேரா.சைமன் ஆகியோர் கலைவழிப்பயிற்சியையும் ஒருங்கிணைத்து வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.