மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளையும்,மாற்றுத்திறனாளி சங்கத்தையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே இழிவு படுத்தியும் மிரட்டியும் பேசிய முடியனுர் ஊராட்சி தலைவரின் அராஜகத்தை கண்டித்து தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றியத் தலைவர் என்.வைத்தியலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பி.வேலு,சிபிஎம் வட்டச் செயலாளர் வெ.ஏழுமலை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன்,மாற்றுத்திறனாளி சங்க மாவட்டத் துணைச் செயலாளர் டி.மாயகிருஷ்ணன்,மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.செல்வம், மாவட்ட குழு டி.கொளஞ்சி,சிவா குமரேசன்,சித்ரா,அமுதா, பூங்கோதை உள்ளிட்டோர் பேசினர்.