tamilnadu

img

விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சியில் முன்னேற்றம்

விழுப்புரம், ஏப். 29-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுப் புரம் மாவட்டம் முன்னேறி யுள்ளது. மேலும் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 3.67 விழுக்காடு கூடுதலாக இந்த ஆண்டு மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந் துள்ளனர்.2018,2019 ஆம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட் டத்தில் மாணவர்கள் 23,627 பேரும், மாணவிகள் 23,105 பேரும் என மொத்தம் 46,732 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், மாணவர்களில் 21,827 பேரும் மாணவியரில் 22,029 பேரும் என மொத் தம் 43,856 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். மாணவியர் கூடுதலாக 95.34 விழுக்காடும், மாணவர்கள் 92.38 விழுக் காடும் என மொத்தம் 93.85 விழுக்காடு தேர்ச்சி பெற் றுள்ளனர்.375 அரசுப் பள்ளிகளில் 90 பள்ளிகளும், 117 மெட்ரிக் பள்ளிகளில் 84 பள்ளிகளும், ஆதிதிராவிட பள்ளி ஒன்றும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 14 ஆம், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மூன்றும், முனிசிபல் பள்ளி ஒன்றும், சுய உதவி பள்ளிகள் 19ம், எஸ்.ஏ பள்ளி ஒன்றும் என மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளான 569இல் 213 பள்ளிகளில் 100 விழுக்காடு மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மூக்கறுப்புகடந்த ஜனவரியில் வேலை வாய்ப்பை அழிக் கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என் றும், சமூக நலனுக்கான கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப் பான ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியபோது “இந்த போராட்டத்தால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும்” என்றெல் லாம் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சுயநலப் போலி நபர்கள் இப் போராட்டத்தை கொச்சைப்படுத்தினர். ஆனால் மாணவர்கள் நலனும், சமூக நலனும் எங்கள் இரு கண்களென ஆசிரியர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியான மேல்நிலைத்தேர்வு முடிவுகளிலும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்டி; போராட் டத்தை கொச்சைப்படுத்தி யவர்களின் மூக்கை உடைத்து கூட்டு முயற்சியில் சாதித்து உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.