பூந்தமல்லியில் மின்சார பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
திருவள்ளூர், டிச.19- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளியன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த வல்லியில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ரூ.43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்தார். ரூ.214.50 கோடி மதிப்பிலான பயணிக ளின் தேவைக்கேற்ப உயரத்தை குறைக்கும் வசதி கொண்ட 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம்ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், பூவிருந்தவல்லி நகர்மன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
