ஆறு மாதமாக வழங்காமல் உள்ள சரண்டர் பில், டபுள்வேஜஸ் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒருவருடமாக வழங்காமல் உள்ள கூலியை வழங்க வேண்டும், ஜிபிஎப் பணத்தை திருப்பி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 13) வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியசென்னை கிளைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் எம்.தயாளன், சென்னை மண்டல செயலாளர் ரவிக்குமார், கிளைச் செயலாளர் கண்ணன், பொருளாளர் முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.