ஒன்றிய அரசை கண்டித்து எண்ணூரில் ஆர்ப்பாட்டம்
44 தொழிலாளர் நல சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக 4 சட்ட தொகுப்புகளாக மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து எண்ணூர் அசோக் லேலண்ட் ஆலை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உழைப்போர் உரிமைக் கழகம் இணைச் செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் தாமஸ், குமாரசாமி, பாலாஜி ராமன், சுரேஷ்குமார், செந்தில்குமார், மோத்தி, ஸ்ரீதர் (காங்கிரஸ்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
