tamilnadu

img

ஊதியப் பேச்சை துவக்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர் உண்ணாநிலை....

சென்னை:
14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை முறையான தொழிற்சங்கத்துடன் துவங்கக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் தலைமை அலுவலகம் முன்பு பெருந்திரள் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்டபல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மாநில அரசும்போக்குவரத்துறையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.இந்நிலையில், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தாமல் காலம் தாழ்த்தி வரும் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற உண்ணா நிலைப்போராட்டத்திற்கு தொமுச பேரவைப் பொருளாளர் கி.நடராஜன் தலைமை தாங்கினார். 

அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். வி.தயானந்தம், சி.துரை (சிஐடியு), தனசேகரன் (எல்பிஎப்), கஜேந்திரன், ஸ்ரீதரன்(ஏஐடியுசி), சுப்பிரமணிபிள்ளை(எச்எம்எஸ்), நாராயணசாமி (ஐஎன்டியூசி), எஸ்.நாகராஜன் (டிடிஎஸ்பி),ஆவடி அந்திரிதாஸ் (எம்எல்எப்), புரட்சி மனோகர் (ஏஏஎல்பி) உள் ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.