tamilnadu

img

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கட்டுமான சங்க மாவட்டமாநாட்டில் கோரிக்கை

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கட்டுமான சங்க மாவட்டமாநாட்டில் கோரிக்கை

காஞ்சிபுரம், ஜன.1- வீடுகட்டும் திட்டத்தை எளிமைப்படுத்தி விண்ணப்பித்த அனைவருக்கும் உரிய காலத்தில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காஞ்சி புரம் மாவட்டம் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் 3 வது மாவட்ட மாநாடு வாலாஜாபாத்தில் நடைபெற்றது . மாநாட்டு  சிஐடியு மாவட்டத்தலைவர் டி.ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.ஜீவா (கைத்தறி சங்கம்), சாரங்கன் (தவிச), அ. ஜெனிட்டன்(சிஐடியு) ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக சி.பச்சையப்பன், பொதுச் செயலாளராக ஆர் .கார்த்திக், பொருளாளராக எஸ்.ராஜகோபால் உள்ளிட்ட  30 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் பெண் கட்டுமான தொழிலாளிக்கு வாரிய கூட்டத்தில் முடிவின் படி 55 வயதில் ஓய்வூதியும் ரூ.3ஆயிரம்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர் பணிபுரியும் இடத்தில் அடிப்படைவசதிகள் செய்து தர வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் விபத்து ஏற்பட்டால் அரசு மருத்துவ காப்பீடு,இஎஸ்ஐ காப்பீடு விரிவான மருத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.