tamilnadu

தலித் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திடுக! ஆக.31ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 27- தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சி  மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகஸ்ட் 31 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கடந்த ஆகஸ்ட் 15 அன்று திரு வள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி வட்டம்,ஆத்துப்பக்கம் மற்றும் நேம லூர் ஆகிய ஊராட்சி மன்றங்களில் தேர்வு செய்யப்பட்ட தலித் தலை வர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை சாதியவாதிகள் தடுத்துள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டுக்கு பிறகு  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆத்து பாக்கம் சென்று தலித் ஊராட்சி மன்ற  தலைவர் கொடியேற்றுவதை உறுதி  செய்திருக்கிறார். ஆனால் தடுத்தவர்கள்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட வில்லை. இதே மாவட்டம் நேமல்லூர் ஊராட்சியில் இன்னும் தலித் தலைவர் கொடி ஏற்ற முடியவில்லை. இதே காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை,கோவை மாவட்  டம் ஜெ.கிருஷ்ணாபும், திருவண்ணா மலை மாவட்டம் அரியாக்குஞ்சூர்,, திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சி பாளை யம், சேலம் மாவட்டம் டி.கோணகம்பாடி ஆகிய ஊராட்சிகளிலும் தலித் தலை வர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை யும், அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் தேர்வு  செய்யப்பட்ட தலித் ஊராட்சி மன்ற  தலைவர் மற்றும் துணைத் தலைவர்க ளுக்கு  உரிய  பாதுகாப்பு வழங்கு வதோடு அவர்கள் தங்களது ஜன நாயகக் கடமைகளை  நிறைவேற்றுவ தற்கு மாநில அரசு உத்தரவாதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 31 அன்று தமிழகம் முழு வதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த. செல்லக்கண்ணு பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.