சென்னை, செப். 30- எண்ணூர் முகத்து வாரத்தை ஆழப்படுத்தி இருபக்கமும் பாறைகளை கொட்டி நிரந்தரமாக படகு போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தாழங்குப்பம் மீனவகிராம மக்கள் திங்களன்று (செப். 30) தர்ணா போராட்டம் நடத்தினர். எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைகள் இரசாயன கழிவுநீர், சுடுநீர் மற்றும் சாம்பல் கலப்பதை நிறுத்த வேண்டும், அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் மீன் பிடித்தொழி லையும் மீனவர்களையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நடுக்கட லில் மீன்பிடிக்கும் கட்டு மரங்கள் , ஃபைபர் படகுகள், சிறியரக விசைப்படகுகள் அவசரகாலத்தில் கரையில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள அதிநவீனதொடர்பு சாதனங்களை வழங்க வேண்டும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் படகு, வலை, எந்திரம் உள்ளிட்ட மூலப்பொருட்க ளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறு த்தப்பட்டன. இந்த போராட்டத்தற்கு கிராமத் தலைவர் வாசு தலைமை தாங்கினார். குண சீலன் (காங்கிரஸ்), பார்த்த சாரதி (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசி னர்.