tamilnadu

img

மேற்கு மாதா கோயில் பகுதியை விற்பனை மண்டலமாக அறிவித்திடுக

மேற்கு மாதா கோயில் பகுதியை விற்பனை மண்டலமாக அறிவித்திடுக

சென்னை, மார்ச் 7- ராயபுரம் மேற்கு மாதா கோயில் சாலை யோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் முதலாம் ஆண்டு பேரவை கூட்டம்  ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.  அஞ்சலி தீர்மானத்தை தனபால் வாசித்தார். நகர விற்பனைக்குழு உறுப்பினர் கே.பலராமன் பேரவையை துவக்கி வைத்தார். சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி வாழ்த்திப் பேசினார். சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக சைபுநிஷா வரவேற்றார். சரவணன் நன்றி கூறினார். தீர்மானங்கள் 15 ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க வேண்டும். நிர்வாகிகள் தேர்வு ஆலோசகராக கோபாலகிருஷ்ணன், கவுரவ தலைவராக கே.பலராமன், தலைவராக தனபால், செயலாளராக சைபுநிஷா, பொருளாளராக சரவணன் உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.