உளுந்தூர்பேட்டை, செப்.6- விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள பா.கிள்ளனூர் தலித் மக்கள் மீது பாமகவினரின் தூண்டுதலால் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதில் தலித் இளைஞர் ஒருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. பா. கிள்ளனூர் தலித் பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை செய்து மேளம் அடித்துக் கொண்டு எடுத்துச் சென்றபோது அருகி லுள்ள பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாரதி (25) தனது நண்பர் சக்தி வேலுடன் இருசக்கர வாகனத்தில் வந் துள்ளார். அப்போது பிள்ளையார் சிலை எடுத்துச் சென்றவர்களைப் பார்த்து “ஊர் பகுதியில் எதற்காக மேளம் அடித்துக் கொண்டு செல்கிறீர்கள்” எனக்கேட்டு சாதியைச் சொல்லி ஆபாச மாக திட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சி யாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஊர் முக்கியஸ்தர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். அடுத்த நாள் மேற்கண்ட சக்திவேல், வீராசாமி, ஜெயபாரதி ஆகியோர் பெரும்பட்டு ஊர் பகுதியைச் சேர்ந்த வர்களை அழைத்துக் கொண்டு பா. கிள்ளனூருக்கு சென்று தகராறில் ஈடு பட்டுள்ளனர்.
அப்போது தலித் பகுதி மக்கள் வாங்கி வைத்திருந்த விநாய கர் சிலையின் தலை உடைக்கப் பட்டுள்ளது. மேலும், தினேஷ் (19) என்ற தலித் இளைஞருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. உடனடியாக தக வலறிந்த காவல்துறையினர் துணை கண்காணிப் பாளர் பாலச்சந்தர், ஆய்வாளர் பிஜி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று கூட்டத்தினரை கலைத்தனர். கத்தியால் குத்தப்பட்ட தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இச்சம்பவத்தின்போது இரு பகுதி பொதுமக்கள், ஊர் முக்கியஸ் தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமா தானத்தை எட்டக்கூடிய நேரத்தில் பாமகவை சேர்ந்த ஒன்றியச் செயலா ளர் சக்திவேல், சில இளைஞர்களை தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தி யுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே காவல்துறையினர் தினேஷின் தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் மீது பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எம்.சக்திவேல், சி.வீராசாமி, வி.சக்திவேல், கா.ஜெய பால், ஆர்.ஆனந்தன், கா.மணிகண்டன், ப.குழந்தைவேல், ப.சிவப்பிரகாசம், எம்.செல்லமணி, கு.ஜெயபாரதி, விஜய், கனகவல்லி ஆகியோர் மீது முக்கிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய் துள்ளனர். இதேபோல் பெரும்பட்டை சேர்ந்த ஆனந்தன் கொடுத்த புகார் மனு மீது பழி பகுதியைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா ளர் டி.ஏழுமலை, திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் ஆகியோர் பா.கிள்ளனூர் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர்.