சென்னை:
டிஜிட்டல் தளத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க தனியாக சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணாசாலை - செங்கல்வராயன் மாளிகையில் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய அமைச்சர் , “டிஜிட்டல் தளத்தில் பயன்பாடுகளை எளிமையாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதில், நடக்கும் தவறுகளைக் கண்டறிய சைபர் கிரைம் குழு தனியாகச் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி டிஜிட்டல் தளத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க, தனியாக சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது’ எனச் சுட்டிக்காட்டினார்.மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் நுட்பம் அதிக அளவில் வளர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.