tamilnadu

img

12 ஆம் வகுப்பு தேர்வு கடலூர் மாவட்டம் 10-வது இடத்திற்கு முன்னேறியது

12 ஆம் வகுப்பு தேர்வு கடலூர் மாவட்டம் 10-வது இடத்திற்கு முன்னேறியது

கடலூர், மே 8- கடலூர் மாவட்டத்தில் 246 பள்ளிகளை சேர்ந்த 14,610 மாணவர்களும், 14,867 மாணவி கள் தேர்வு எழுதினர். இதில், 13 ஆயிரத்து 913 மாணவர்களும், 14 ஆயிரத்து 403 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 96.06  சதவீதமாகும். கடந்த ஆண்டு, கடலூரில் 94.36 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று 22 வது இடத்தில் இருந்த கடலூர் மாவட்டம் இந்த முறை 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில்102 பள்ளி கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கல்வி தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் முன்னேறியுள்ளது”என்றார். மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை யும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஒரு பாடப் பிரிவில் மட்டும் தேர்ச்சி பெற்ற வர்களை கணக்கெடுப்பு நடத்தி கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி கொடுத்தோம். மேலும், சமூக பொருளாதாரம் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களையும் கணக்கெடுப்பு நடத்தி, தனி குழு அமைத்து கண்காணித்து, பள்ளிக்கு வரவழைத்து தேவையான பயிற்சிகள் வகுப்புகள் நடத்தினோம்.  இதனால் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்றும்  இனி வரும் காலத்தில் அதிக கூடுதல் கவனம் செலுத்தி முதல் மூன்று இடங்களில் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மாற்றுத்திறனாளி மாணவி

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி மு.பிரித்திகா 559  மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் பாராட்டினர்.