tamilnadu

img

தேன்கனிக்கோட்டையில் சிபிஎம் பொதுக் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப். 12-மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் மருத்துவர் ஏ.செல்ல குமாரை ஆதரித்து மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் தேன் கனிக்கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். ஜெயராமன், செயற் குழு உறுப்பினர்கள் இருதயராஜ், சேகர், சாம்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சந்திரசேகர், நாகரத்தினம்மா, திமுக வட்டத் தலைவர் சீனிவாசன், காங்கிரஸ் தலைவர் தாஸ், சிபிஎம் நிர்வாகிகள் சிவராஜ், பட்டாபிராமன், வெங்கடேஷ், புஷ்பா, உதயகுமார், முத்துராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.