தமிழ்நாட்டில் 5 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் கொடுக்கப்பட்டுவிட்டதாக பொய்யை பரப்பும் தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் நேற்று மாலை வரை 5 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவம் கொடுக்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் அலுவலர்கள் எல்லாம் புயல் வேகத்தில் பணியாற்றி இருந்தால்தான் இது சாத்தியம். ஆனால் அப்படி எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்பது அவர்களுக்கே தெரியும்.
ஆணையமே SIR என்பது கடினமானது அல்ல மிகவும் எளிதானது என்ற பொய்யை நம்ப வைக்கத்தானே இந்த பித்தலாட்டம்.
எங்கள் தெருப்பக்கம் எந்த அதிகாரியும் வரவில்லை என்ற குரல்கள் எங்கெங்கும் ஒலிக்கிறது.
பொய்யை பரப்பும் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
