சென்னை:
கொரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (62) புதனன்று காலை 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.
ஜெ.அன்பழகனுக்கு ஜூன் 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. அவருடைய பிறந்த நாளான (ஜூன் 10) அவர் உயிரிழந்தார். 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை திமுக சந்திக்கவுள்ள நிலையில், மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அன்பழகன் உயிரிழந்திருப்பது திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ ஜெ. அன்பழகன் எம்எல்ஏ மறைவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் ஜூன் 10 முதல் மூன்று நாள்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக்கம் பத்தில் பறக்கவிடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று நாள்களுக்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறது” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
முன்னதாக, இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியதுபோல அன்பழகனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.அத்துடன் ஸ்டாலின் தெரிவித்த இரங்கல் செய்தி யில், எனது அன்பு உடன் பிறப்பினை இழந்தேன். என்னோடு தோளோடு தோள் நின்ற தியாகராயநகர் தோழன். தன்னுடைய உடல் நிலையை கவனித்து கொண்டு இருந்த இடத்தில் இருந்தே கொரோனா நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு கூறியிருந்தேன். ஆயினும் அவர் நேரில் சென்றே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அவரை இழந்து தவிக்கின்றேன் என்று கூறியிருந்தார்.சென்னை குரோம் பேட்டை மருத்துவமனையில் இருந்து, ஜெ.அன்பழகன் உடல், தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.சிறிது நேரத்தில் அங்கிருந்து கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் மறைந்ததால், அவரது உடல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
தலைவர்கள் இரங்கல்
திமுக எம்எல்ஏ ஜெ. அன் பழகன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் கே. எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் அமைப் பின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.