சென்னை
தமிழக மக்கள் பிரதிநிதிகளை மிரட்டி வரும் கொரோனா என்னும் என்னும் ஆட்கொல்லி வைரஸ் அமைச்சர் கே.பி.அன்பழகனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் நாமக்கல்லில் உள்ள அமைச்சர் தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டது.
மேலும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம் மற்றும் TNPFCL என்ற கைப்பேசி செயலி துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.