tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தோற்று...  மொத்த பாதிப்பு 4 லட்சத்தை நெருங்குகிறது... 

சென்னை 
தமிழகத்தின் தினசரி பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்குநாள் மின்னல் வேகத்தில் தான் பரவி வருகிறது. குறிப்பாக எந்த பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது, எந்த பகுதியில் கொரோனா வேகமாக பரவுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. தினமும் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள் கொரோனா பாதிப்பை அறியும் பச்சை, ஆரஞ்சு மண்டலங்களை மறந்து விட்டனர். 

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் கொரோனா பலி எண்ணிக்கை 100-க்குள் இருந்த நிலையில், இன்று (ஆக., 25) மீண்டும் 100-யை  தாண்டியுள்ளது. இன்று மேலும் 107 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,454 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை மாவட்டம்...

இன்றைய பாதிப்பு  - 1,270 

மொத்த பாதிப்பு  - 1,27,947

பலி  - 20 

மொத்த உயிரிழப்பு  - 2,623