சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொடக்கத்தில் அதிக பாதிப்பை சந்தித்த சென்னை மண்டலத்தில் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள நிலையில், மதுரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் படு வேகமாக கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 82 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில் 526 பேரும், மதுரையில் 267 பேரும், வேலூரில் 250 பேரும், திருவண்ணாமலையில் 203 பேரும், செங்கல்பட்டில் 179 பேரும், தூத்துக்குடியில் 170 பேரும், கன்னியாகுமரியில் 146 பேரும், ராணிப்பேட்டை, விருதுநகரில் தலா 145 பேரும், நெல்லையில் 130 பேரும், திண்டுக்கல்லில் 125 பேரும், விழுப்புரத்தில் 101 பேரும், திருச்சியில் 94 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 90-க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.