முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மறைந்தார். இதை அடுத்து, டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் உறுப்புக் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 28) நடைபெற இருந்த பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.