tamilnadu

img

தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்த அரசு முன்னுரிமை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை, செப்.20- இதயம், ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளிப்பதாக மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார். சென்னையில் இருந்து வெள்ளியன்று (செப்,20) நாகர்கோவில் கிம்ஸ் மருத் துவமனையை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் முதல மைச்சரும் மாநில அரசும்  அதிக  அக்கறை கொண்டுள் ளதாக கூறினார்.    “பரவலாக் கப்பட்ட வளர்ச்சி எல்லோ ருக்கும் எல்லாம்” என்பதே  மாநில அரசின் குறிக்கோள்.  இந்தியாவில் மிகவும் நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு. நாள்தோறும் ஒரு  நகரப்பகுதி உருவாகி வருகிறது. 2507 அரசு மருத் துவமனைகள் அதில் 99435 படுக்கைகள் என ஆயிரம் பேருக்கு ஒரு படுக்கை வசதிகள் கொண்ட மாநில மாக தமிழ்நாடு உள்ளது. அதிகமான ஆரம்ப சுகாதார மையங்களை கொண்ட மாநிலமும் தமிழ்நாடுதான். மாநிலஅரசு சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் 6.1  விழுக்காடு நிதியை ஒதுக்கு கிறது. ஒன்றிய அரசே 2விழுக் காடுதான் ஒதுக்குகிறது. சுகாதாரம் தொடர்பான பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தி  முதன்மை யான மாநிலமாக  தமிழ்நாடு  திகழ்கிறது. அதிகரித்து வரும் என்சிடி எனப்படும் தொற்று அல்லாத நோய் களை தடுக்க அதிக முன்னு ரிமை அளிக்கப்படுகிறது. மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் இதயம், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு களுக்கு வீடுதோறும் சென்று மருத்துவ வசதிப்பதோடு மருந்துகளும் வழங்கப்படு கிறது என்றும் அவர் கூறினார்.   ஏழை எளிய மக்களுக் கான மருத்துவ காப்பீட்டு  திட்டத்தை அறிமுகப்படுத் தியது உள்பட பல முன்மாதிரி யான நடவடிக்கைகளை எடுத்த அரசு திமுக அரசு என்றும் அவர்  கூறினார். தமிழகத்தில் இரண்டு அரசு  மருத்துவமனைகளில் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் மேற் கொள்ளப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  முன்னதாக துவக்க நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் மனோ  தங்கராஜ், கிம்ஸ் ஹெல்த் இயக்குநர் டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா, குவாலிட்டி கேர்  இந்தியா லிமிடெட் மேலாண்  இயக்குநர் வருண் கண்ணா  பிளாக் ஸ்டோன் நிறுவனத் தின் இயக்குநர் கணேஷ் மணி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.