சென்னை:
சிஐடியு முதுபெரும் தலைவர்கள் கே.வைத்தியநாதன், ராஜாங்கம், டி.என்.நம்பிராஜன், ஏ.ஜி.காசிநாதன் ஆகியோரின் படத்திறப்பு விழா மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு தலைமையில் ஞாயிறன்று (ஆக. 8) சென்னையில் உள்ள சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
தோழர் கே.வைத்தியநாதன் படத்தை மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்து பேசுகையில், தோழர்கள் ராஜங்கம், நம்பிராஜன், காசிநாதன் ஆகியோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போதும் உடல் நிலையை கணக்கில் கொள்ளாமல் இயக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த தோழர் ராஜங்கத்தின் உடலை ஊருக்குள் கொண்டு செல்லவும், அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யவும் கூட ஊர் மக்கள் அனும
திக்கவில்லை. பின்னர் ஆட்சியரிடம் பேசி வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. யாரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. ஆனால் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இது அவர் இயக் கத்தோடும், மக்களோடும் எந்த அளவிற்கு இணக்கமாக இருந்து செயல் பட்டார் என்பதை காட்டுகிறது. இன்று அவரது குடும்பம் முழுவதும் நமது இயக்கத்தோடு உள்ளது.
தோழர் நம்பிராஜன் தொழிலாளியாக இருந்த காலத்தில் இருந்து இயக்கத்தோடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பல தொழிற்சாலைகளில் தலைவராக இருந்து திறம்பட செயல்பட்டார். தோழர் ஏ.ஜி.கே. ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, அவரது குடும்பம் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போதும், முழுநேர ஊழியராக அவரை அழைத்த போது உடனே அதை ஏற்றுக் கொண்டு வேலையை விட்டுவிட்டு வந்தார். தனது இறுதிமூச்சு வரை ஏற்றுக் கொண்ட பணிகளை திறம்பட செய்து முடித்தார்.எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த முடிவை கறாராக, உறுதியாகஅமல்படுத்தியவர் தோழர் கே. வைத்தியநாதன் அவர் சர்க்கரைஆலை உள்ளிட்ட தொழிற்சாலை களில் தொழிற்சங்கங்களை உரு வாக்கியது மட்டுமல்லாமல், பல முறைசாரா சங் கங்களை உருவாக்கியவர். அனைத்துக் கட்சி தலைவர்க ளின் விவரங்களையும், தமிழகம், புதுவை மாநிலத் தேர் தல்களின் முழு விவரங்களையும் புள்ளி விவரங்களோடு கூறுவார்.தனது உடல் ஒத்துழைக்காத நிலையிலும் கூட படித்துக் கொண்டே இருந்தார். படித்தவற்றை பிறருக்கு கூறுவார். அவர் விபத்தில் சிக்காமல் இருந்திருந்தால் 100 ஆண்டுகாலம் வாழ்ந்திருப்பார். இயக்கத்திற்கு மேலும் பயன்பட்டிருப்பார். அவர்கள் நால்வரும் விட்டுசென்ற பணிகளை நாம் கூட்டாக இணைந்து செயல் படுத்துவோம் என்றார்.
தோழர் ராஜங்கம் படத்தை திறந்து வைத்து டி.கே.ரங்கராஜன் பேசுகையில், 4 தோழர்களும் எடுத்த முடிவை உறுதியுடன் அமல்படுத்தியவர்கள். 1990ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பின்னர் உறுப்பினர் பதிவு பாதிக்கப் பட்டது. அப்போது மின்வாரியத் தோழர்கள் கட்டுமான சங்கத்தில் உறுப்பினர்களையும், போக்குவரத்து தோழர்கள் ஆட்டோ தொழிலாளர்களையும் திரட்டி உறுப்பினர் பதிவை மேம்படுத்தினர். தோழர் ராஜாங்கம் பீடி சங்கத்தில் பொறுப் பேற்றவுடன் மாநிலம் முழுவதும் சங்கத்தை விரிவுபடுத்தினார். நீதிமன்றம் சென்று கோரிக்கைகளை வென்றெடுப்பார். தில்லியில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று பணிகளை முடிப்பார்.தோழர் கே.வி. கால் நடக்க முடியாமல் போனதற்கு காரணமே சிஐடியு நிதியை செலவழிக்கக் கூடாது என்று ஆட்டோவில் செல்லாமல் பேருந்தில் சென்றதுதான் காரணம். இந்த தோழர் களின் தியாகத்தை முன்னெடுக்க வேண்டும், வரும் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தோழர் நம்பிராஜன் படத்தை திறந்துவைத்து ஏ.கே.பத்மநாபன் பேசுகையில், இந்த 4 தோழர்களும் தமிழக தொழிற்சங்க வரலாற்றின் ஒருபகுதி என்று புகழாராம் சூட்டினார். தோழர் கே.வி. ஞானத்துடன், அர்ப் பணிப்புடன் பணியாற்றியவர். 1979ஆம் ஆண்டு முதல் சிஐடியு மையத்தில் செயல்பட்டு வந்தார். அவர் எழுவதை விட மற்றவர்களை எழுதவைத்தவர். அனைத்து மாவட் டங்களுக்கும் சென்று வழிகாட்டியவர். அவர் தனது இறுதிமூச்சு வரை இயக்கத்திற்காகவும், இயக்க வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் என்றார்.தோழர் ஏ.ஜி.கே. படத்தை திறந்து வைத்து மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில், சக்கர நாற்காலியில் இருக்கும் போது கூட காலை 7 மணிக்கெல்லாம் தினசரி நாளிதழ்களை படித்து விடுவார். மேலும் அதில் முக்கியமாக நிர்வாகிகள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி இருந்தால். அதை குறித்து வைத்து படிக்க வைப்பார். அனைவருக்கும் குடும்பத்தின் மூத்த சகோதரர் போல் இருந்து வழிகாட்டினார்.தோழர் ராஜங்கம் செங்கொடி இயக்கமே இல்லாத பகுதியில் தொழிற்சங்க பலத்தில் மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றவர்.தோழர் ஏ.ஜி.கே. எதிர்மறையாக பேசமாட்டார். அவரிடம் பாசிடிவ் அணுகுமுறை மட்டுமே இருந்தது. குடும்பத்தை இயக்கத்தின்பால் கொண்டு வந்தவர். அவர் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். தோழர் கே.வி. இயக்கத் தோழர்களின் குடும்ப பின்னணியை தெரிந்து வைத்திருப்பார். அனைவரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர்.
இவர்களின் அனுபவங்களை பின்பற்றி இயக்கப் பணிகளை முன்னெடுப்போம் என்றார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் நன்றி கூறினார்.இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.கண்ணன், திருசெல்வன், துணைத் தலைவர் எம்.சந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் ஆர்.ஜெயராமன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தென் சென்னை மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.