சென்னை, ஏப். 6- உடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கும் திட்ட ங்களை முன்னெடுப்போம் என்று சென்னையில் நடை பெற்ற உணவு பாது காப்பு அலுவலர்கள் மாநாட்டில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரி வித்தார். தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு அலு வலர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு மாநிலத் தலை வர் எம்.எஸ்.முருகேசன் தலைமையில் சென்னை யில் வீ.ஜெயவேல் நினை வரங்கில் செவ்வாயன்று (ஏப்.5) நடைபெற்றது. பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். மாநாட்டில் கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசுகையில், “என்னுடைய உள்ளத்திலும், ரத்தத்திலும் ஊறிப் போனது தான் போராட்டக் குணம். நானும் தொழிற்சங்கவாதி யாக இருந்து பல போராட்டங் களை முன்னெடுத்துள் ளேன்” என்றார். ஒரு சங்கத்தை கட்ட மைத்து போராடுவது என்பது சலுகைகளை கேட்டுப் பெறுவதற்கு மட்டுமல்ல. தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தவும்தான் என்றும் அமைச்சர் கூறி னார்.
உங்களின் செயல்பாட் டால் உணவு பாதுகாப்பு நட வடிக்கையில் இந்தியாவிலே தமிழகம் 3ஆவது இடத்தில் உள்ளது. இதை முதலிடத் திற்கு கொண்டு வரு வதற்கான முயற்சியை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்தார். “சற்றே குறைப்போம்” என்ற தலைப்பில் உப்பு, எண்ணெய், சர்க்கரையை குறைப்போம் என்று மேற் கொள்ளும் விழிப்புணர்வு பிர ச்சாரம் மிக முக்கியமானது. அதேபோல் கடந்த 9 மாதங்களில் “உணவை வீணாக்காதீர்கள்” என்ற திட்டத்தின் மூலம் 18,845 நிகழ்வுகள் நடத்தி, ஏறக்குறைய ஒரு லட்சம் பேருக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
உணவு பாதுகாப்பு அலு வலர்கள் அலுவலகங்களில் உதவியாளர் பணியிடம் உரு வாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நிதி அமைச்ச கத்துடன் கலந்து பேசி எதிர்காலத்தில் இதற்கான முயற்சியும் மேற்கொள்ளப் படும். கடந்த ஆட்சியில் பழி வாங்கப்பட்ட அன்பழகனின் 18 மாத காலத்தை கட்டாய காத்திருப்பு காலமாக கருதி அவருக்கு அடுத்த ஒரு வாரத் திற்குள் நிலுவை ஊதியம், பணப்பலன்கள் வழங்கப் படும். பிற கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிதி அமைச்சகத்துடனும் கலந்து பேசி எதிர்காலத்தில் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப் படும் என்று அமைச்சர் தெரி வித்தார். “பாதுகாப்பான உணவு அறிவோம், தெளிவோம்” என்ற விழிப்புணர்வு நூலை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் வெளியிட மாநில நிர்வாகிகள் பி.நல்லத்தம்பி, எல்.ஸ்டாலின் பிரபு, எஸ்.செல்வன், ஆர்.வேலவன், ஜெ.ரவிச்சந்திரன் ஆகி யோர் பெற்றுக்கொண்டனர். இந்த மாநாட்டில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநில உணவு பாதுகாப்பு ஆணை யர் பி.செந்தில்குமார் ஆகி யோரும் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்ப ரசு வாழ்த்திப் பேசினார். முன்னதாக மாநில துணைத் தலைவர் ஏ.போஸ் வரவேற் ற்றார். மாநில பொருளாளர் எம்.ஜான் சிம்சன் நன்றி கூறினார்.